விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை : முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையின் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கான பணிநியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

Update: 2019-03-04 22:56 GMT
விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையின் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கான பணிநியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில்  தடகள வீரர் தருண் அய்யாசாமி, துடுப்பு படகோட்டம் வீரர் லட்சுமன், வாள்வீசும் வீராங்கனை பவானிதேவி ஆகியோருக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். மேலும், பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அவர் காசோலையையும் வழங்கினார். 
Tags:    

மேலும் செய்திகள்