விடிய விடிய ஆடல்பாடல்கள், பக்தி நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் என ஈஷா மையம்

மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் விடிய விடிய நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

Update: 2019-03-04 21:07 GMT
மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் விடிய விடிய நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. அதே போல மேலும் பல சிவாலயங்களிலும் விடிய விடிய நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அரசியல் பிரமுகர்கள், நடிகர் நடிகைகள் என பலதரப்பினரும் இரவு முழுவதும் விழித்திருந்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். விடிய விடிய ஆடல்பாடல்கள், பக்தி நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் என ஈஷா மையம் களைகட்டியது. கலைஞர்கள் நெருப்பில் செய்த வீரதீர சாகச நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அவ்வப்போது ஜக்கி வாசுதேவும் ஆடி பக்தர்களை உற்சாகப்படுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்