நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை - அரசு தரப்பு வழக்கறிஞர்

மாஜிஸ்திரேட் முன்பாக 164 வாக்குமூலம் பெறப்படவில்லை - மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்

Update: 2019-03-04 19:18 GMT
ஓராண்டுக்கும் மேலாக  சிறையில் உள்ள  பேராசிரியை நிர்மலாதேவிக்கு நீதிமன்றம் தானாக முன்வந்து ஏன் ஜாமின் வழங்க கூடாது என  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவ்வாறு ஜாமின் வழங்கினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏதேனும் உள்ளதா? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அவரது உயிருக்கு ஆபதில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். தொடர்ந்து,   நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்குவதில் அரசிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்தார். 
இதையடுத்து நீதிபதிகள்  வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
Tags:    

மேலும் செய்திகள்