கல்லூரிக்கு சென்று வர சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவி - இருசக்கர வாகனம் வழங்கி உதவிய அமைப்பு
நாகை மாவட்டம் மேக்கிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாரதி, அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நாகை மாவட்டம் மேக்கிரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாரதி, அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளி என்பதால் பாரதியை அவரது தாய் தினமும் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லூரிக்கு அழைத்து சென்று வருகிறார். இதுகுறித்த செய்திகள் வெளிவந்த நிலையில், கரூர் இணைந்த கைகள் உயிர்காக்கும் சேவை அமைப்பினர் மாற்றுத்திறனாளி மாணவி பாரதிக்கு புதிய இருசக்கர வாகனத்தை வழங்கி உதவியுள்ளனர். இதற்கு மாணவி பாரதி குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.