பூத்து குலுங்கும் ஜகரண்டா மலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஜகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஜகரண்டா மலர்கள் பூத்து குலுங்குகின்றன . ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது பிரேசில் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த வகை மரங்கள் பல நூற்றாண்டுகளை கடந்தும் நிற்கின்றன. மலைப்பாதையிலும் , தேயிலை தோட்டங்களுக்கு இடையேயும் ஜகரண்டா மலர்கள் பூத்து குலுங்கும் அழகை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.