கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்ததாக புகார் : 7 பேர் கைது

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை செல்போனில் படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-26 10:09 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பழகியுள்ளார். இந்த நிலையில் தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பதாக அவர் கூறியதை நம்பிய அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அவரை காரில் இருந்த படி சிலர் ஆபாசமாக படம் எடுத்ததோடு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த தங்க செயினை பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திருநாவுக்கரசை தேடி வருகின்றனர். சமூக வலைத்தளம் மூலம் நட்பாகி பணக்கார வீட்டு பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுப்பதோடு பணம் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்