லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
* மின்வாரிய உதவி பொறியாளர் பணியிடத்துக்கான எழுத்துத்தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட கோரி பரணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
* இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வு முடிந்த சில மணி நேரத்தில் தேர்வில் கேட்கப்பட்ட 120 கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
* மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும்
பழக்கம் உள்ளதாக தெரிவித்தனர். லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால், லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என்றும் அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
* லஞ்சம் வாங்குவோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்ச வாங்கும் பழக்கம் ஒழியும் என்றும் தெரிவித்தனர்.