புதிய வாக்காளர்களை சேர்க்க விழிப்புணர்வு முகாம் : செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு

புதிய வாக்காளர்களை சேர்க்கும் வகையில் செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வைக்கும் நிகழ்வு சேலம் அருகே நடந்தது.

Update: 2019-02-23 19:17 GMT
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்கும் வகையில் செல்பி வாக்காளர்கள் முகாம் நடைபெற்றது. புதிதாக தங்கள் பெயரை சேர்க்கும் வாக்காளர்கள் தங்களை செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். வாழப்பாடியில் உள்ள தனியார் மகளிர்  கல்லூரியில் நடந்த செல்பி வாக்காளர்கள் முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்