தமது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் - திருமாவளவன்

தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால், டிஜிபியை அணுகி பாதுகாப்பு கோரி மனு அளிக்கலாம் என திருமாவளவனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2019-02-22 22:54 GMT
தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால், டிஜிபியை அணுகி பாதுகாப்பு கோரி மனு அளிக்கலாம் என திருமாவளவனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, அவர் கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில்,  ஆணவப் படுகொலை மற்றும் சாதி மறுப்பை வலியுறுத்தி பல்வேறு விவகாரங்களில் போராடி வரும் தன் மீது திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் சென்னையில் தாக்குதல் முயற்சி நடந்ததாக  கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதி இளந்திரையன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருமாவளவன் கருதினால், டிஜிபியை அணுகி மனு அளிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்