பிச்சாவரத்தில் விடப்படும் இறால் பண்ணை கழிவுநீர் : அலையாத்தி காடுகளை காப்பாற்ற கோரிக்கை

இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பிச்சாவரத்தில் உள்ள அலையாத்தி காடுகள் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-02-22 18:37 GMT
சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அலையாத்தி காடுகள் பரந்து விரிந்துள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் இறால் பண்ணை கழிவுநீர் பிச்சாவரம் பகுதியில் விடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் அலையாத்தி காடுகளில் உள்ள மரங்கள் பட்டுப்போக துவங்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அங்கு இயக்கப்படும் படகுகளில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் அரிதான சதுப்பு நில தாவரங்களை அழியத்துவங்கியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்