கோயில் நில ஆக்கிரமிப்பு : நீதிபதிகள் அதிருப்தி

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-12 13:12 GMT
* சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை மாவட்டம் பறவையில் உள்ள வடக்கு வாசல் செல்லியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 

* இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என தெரிவித்தனர்.

* இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு இடங்களை தானமாக வழங்கியோர் பட்டியல் மற்றும் சொத்து  விவரங்கள் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக உள்ளதா?என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும்  உறுதிபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
 
* இது தொடர்பாக வருவாய் துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 19 தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்