மாசி திருவிழா - காவடிகளுடன் பக்தர்கள் நடைப்பயணம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருசெந்தூருக்கு முருகர் பக்தர்கள் காவடி ஏந்தியவாறு நடைப்பயணமாக செல்கின்றனர்.
மாசி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருசெந்தூருக்கு முருகர் பக்தர்கள் காவடி ஏந்தியவாறு நடைப்பயணமாக செல்கின்றனர். பறக்கும் காவடி, தொட்டில் காவடி, அக்னி காவடி, சூரிய காவடி, புஷ்ப காவடி என பல்வேறு விதமாக 200க்கும் மேற்பட்ட காவடிகளுடன் நடைபயணமாக புறப்பட்டனர். இதற்காக குளச்சல் திங்கள்நகர், நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்று பாதையில் இயக்கப்பட்டன.