மெட்ரோ பணிகள் : "50 % நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் - பிரதமரிடம், முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு 50 சதவீத நிதி பங்களிப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமரிடம், முதலமைச்சர் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான இரண்டாம் கட்ட பணிகளை துவங்க தமிழக அரசால் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்பகுதியாக 50 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் கட்டமைப்புகளை உருவாக்கிட ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனம் 20 ஆயிரத்து 196 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கும், முதற்கட்ட பணிகளை போல், மத்திய அரசு 50 சதவீத நிதி பங்களிப்பை வழங்கவும், அத்திட்ட பணிகளை துவக்குவதற்கு உரிய அனுமதியை துரிதமாக வழங்கவும் வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பூர் வந்த பிரதமர் மோடியிடம் நேரில் கடிதம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.