சட்டசபையில் பல்வேறு பிரச்சினைகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

தமிழக சட்டசபையில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Update: 2019-02-07 03:32 GMT
தமிழக சட்டசபையில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம், கடந்த ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 8-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில், நாளை மீண்டும் சட்டசபை கூடுகிறது. இதில், வறட்சி பாதிப்பு, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, குடிநீர் தட்டுப்பாடு, ஜாக்டோ - ஜியோ போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்