திருட்டு வீடியோக்களை அடியோடு ஒழிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
திருட்டு வீடியோக்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரைத்துறையில் பரவிவரும் திருட்டு வீடியோக்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜா ரங்குஸ்கி திரைப்படத்தை திரையரங்கில் திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக கரூர் திரையரங்க உரிமையாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரின் முன் ஜாமின் மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறி, முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அவர், திரைத்துறையில் காட்டுத் தீ போல பரவி வரும் திருட்டு வீடியோவை அடியோடு ஒழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.