செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது..?

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-02-06 11:19 GMT
* மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், என்பவர், சாலை விதி மீறல் குறித்து தாக்கல் செய்த மனு .நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கவென நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட எண் எப்போதும் சுவிட்ச் ஆப் என்றே வருவதாக மனுதாரர் கூறினார். 

* அதற்கு நீதிபதிகள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார் அளிப்பதற்கான எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது ஏன்? என கேள்வி எழுப்பினர். 

* தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

* இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

* போக்குவரத்து விதிமீறல் தொடர்பான அபராதத்தை 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்த கோரிய வழக்கிலும் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்