காளையா ? காளையர்களா ? - ஜல்லிக்கட்டுப் போட்டி

காங்கயம் காளைகளுக்கு பெயர் போன திருப்பூரில், இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2019-02-03 06:57 GMT
காங்கயம் காளைகளுக்கு பெயர் போன திருப்பூரில், இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை  கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த 500 காளைகள் மற்றும் 550 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். அடங்க மறுத்த காளைகளை அடக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட, சூழ்ந்திருந்த பார்வையாளர்கள் அவர்களை உற்சாகமூட்டினர்.


அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் - மல்லுகட்டிய இளைஞர்கள் 

மணப்பாறை அருகே கலிங்கபட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கினர். அவற்றை அடக்கும் முயற்சியில் 350 மாடுபிடி வீரர்கள் ஈடுபட்டனர். வெற்றிப்பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்