பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கொள்ளை கும்பல் : தங்கத்தாலி, தங்கசங்கிலி, செல்போன் பறிப்பு

சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு, வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் நந்திபகவானுக்கு, பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்கள் பழங்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

Update: 2019-02-03 05:09 GMT
சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு, வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில்  நந்திபகவானுக்கு, பால், தயிர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்கள் பழங்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் வெள்ளத்தில் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மன் பரிகார உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே, கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட கொள்ளை கும்பல், தங்கத்தாலி, தங்கசங்கிலி என இரண்டு பெண்களிடம் 10 சவரன் நகைகளையும், ஒரு பெண்ணிடம் செல்போன் மற்றும் பர்சையும் பறித்து சென்றது.
Tags:    

மேலும் செய்திகள்