மணல் திருட்டு பற்றி புகார் அளித்தவர் மீது தாக்குதல்
நாகை மாவட்டம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி குமார் அப்பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவர் முறைகேடாக மணல் விற்பனை செய்வதாகக் புகார் அளித்துள்ளார்.
நாகை மாவட்டம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி குமார், அப்பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவர், முறைகேடாக மணல் விற்பனை செய்வதாகக் புகார் அளித்துள்ளார். இதையறிந்த முஜிபுர் ரஹ்மான், குமாரை தகாத வார்த்தையால் திட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குமார் அளித்த புகாரை, பெரம்பூர் போலீஸார் பெற்றுக்கொள்ளாததால், டி.எஸ்.பி யிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பெரம்பூர் காவல் நிலைய காவலர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குமாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவர், பாதுகாப்பு கேட்டு குடும்பத்துடன் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தஞ்சமடைந்தார். அவரை அலுவலர்கள் சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.