பாரம்பரிய சின்னங்களை மீட்க தமிழக அரசு முடிவு
வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, நாயக்கர் மஹால், பழங்கால கோயில்கள் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை புனரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதில், மதுரை திருமலை நாயக்கர் மஹால், கட்டபொம்மன் கோட்டை, சிவகங்கை மருதுபாண்டியர் கோட்டை உள்ளிட்ட பாரம்பரியமிக்க 12 கோட்டைகள் மற்றும் பழமையான கோயில்கள் சீரமைக்கப்பட உள்ளன. மேலும், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 கோயில்கள், விழுப்புரம் அடுத்த தியாகதுருகம் மலைக்கோட்டை, செய்யூர் ஆலம்பறை கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உதயகிரி கோட்டை, பட்டுக்கோட்டையை அடுத்த மனோரா கோபுரம், நாகையில் உள்ள டச்சுக் கல்லறை ஆகியவை சீரமைக்கப்படவுள்ளது.