சின்னாளபட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு : திறமையை வெளிப்படுத்தி 400 காளைகள், 450 வீரர்கள்
400 - காளைகள் வாடிவாசல் வழி சீறிப்பாய்ந்தன. அவற்றை 450 வீரர்கள் தழுவினர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே ஏ.வெள்ளோடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா களைகட்டியது. புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 400-
காளைகள் வாடிவாசல் வழி சீறிப்பாய்ந்தன. அவற்றை 450 வீரர்கள் தழுவினர். விதிமுறைகள்படி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில், சிறப்பாக விளையாடிய காளைகள் மற்றும் வீரர்களுக்கு, தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதை, பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.