உயரதிகாரிகள் அழுத்தத்தால் வழக்குப் பதிவு என புகார் : மன அழுத்தத்தில் கடைநிலை காவலர்கள் என தகவல்
காவல் மற்றும் கண்காணிப்பு பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி. அறிவுறுத்தி இருந்தார்.
காவல் மற்றும் கண்காணிப்பு பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி. அறிவுறுத்தி இருந்தார். பெரும்பாலான மாவட்டங்களில் இத்தகைய புகார் கடைநிலை காவலர்கள் மீது வராத நிலையில், டி.ஜி.பி. உத்தரவை மேற்கோள்காட்டி, குறைந்தது 10 முதல் 20 புகார்கள் பதிய கட்டாயப்படுத்தப்படுவதாக கீழ்நிலை காவலர்கள் தெரிவித்துள்ளனர். உயரதிகாரிகளின் அழுத்தத்தால் பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.