"மக்கும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்த 4 நிறுவனங்களை மூட வேண்டும்" - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

உரிய அனுமதியின்றி உற்பத்தி செய்து வந்ததாக புகார்

Update: 2019-01-29 06:44 GMT
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி மக்கும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்து வந்த நான்கு நிறுவனங்களை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பயோடெக் பேக்ஸ், க்ளீன் அண்ட் க்ரீன் பாலிபேக்ஸ், டிரினிட்டி பிளாஸ் டெக், பவானி பிளாஸ்டிக்ஸ் உள்ளிட்ட இந்த நான்கு நிறுவனங்கள் சென்னையில் இயங்கி வந்தன. ஆனால் இந்த நிறுவனங்கள் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளின் கீழ் அனுமதி பெறவில்லை என்பதால் அவற்றை உடனே மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்