தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரம் கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, வருவாய் மற்றும் வேளாண்துறை செயலாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க ஆணையிட்டுள்ளனர்.