வழக்கறிஞர் போல நடித்து ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ஆட்டோ எண்ணை மாற்றி விற்பனை

Update: 2019-01-23 21:58 GMT
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிவண்ணன் என்பவர், கோயம்பேட்டில் இருந்து வழக்கறிஞர் ஒருவரை திருவேற்காடு-க்கு அழைத்து சென்றுள்ளார். வானகரம் அருகே சென்றபோது, ஹோட்டலில்  உணவு வாங்கி வருமாறு மணிவண்ணணை, அந்த வழக்கறிஞர்
அனுப்பியுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணாததால் காவல் நிலையத்தில் மணிவண்ணன் புகார் அளித்துள்ளார்.  இதேபோல முகமது அலி என்பவரும் தனது ஆட்டோவை காணவில்லை என புகார் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில்,  திருவள்ளூரை அடுத்துள்ள கடம்பத்தூரை சேர்ந்த தியாகராஜன் என்பவர், வழக்கறிஞர் என்று பொய் சொல்லி, ஆட்டோக்களை இதே பாணியில் திருடுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. திருடிய ஆட்டோகளின் எண்களை மாற்றி அதை விற்பனை செய்ததையும் தியாகராஜன் ஒப்புக் கொண்டார்.  இதனையடுத்து தியாகராஜனை கைது செய்த போலீசார் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்
Tags:    

மேலும் செய்திகள்