பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் பரிசுப் பொருள் - புதிய திட்டத்திற்கு பொது மக்கள் வரவேற்பு

சேலம் மாநாகராட்சியை, பிளாஸ்டிக் இல்லா நகராக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-01-23 18:07 GMT
சேலம் மாநாகராட்சியை, பிளாஸ்டிக் இல்லா நகராக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக,  தமிழகத்தில் முதன் முதலாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில், பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்தால் பரிசு பொருள் வழங்கும் புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்ச்சிக்காக கொடுக்கும் நபர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் , அதிநவீன முறையில் செல்போன் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி மற்றும் ஊக்கப் பரிசு போன்றவற்றை இயந்திரத்தின் மூலம் பெற்று பயனடையும் வகையில் மாநகராட்சி வடிவமைத்து உள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்