மேகதாது விவகாரத்தில், கர்நாடகா, மத்திய அரசின் பதில் மனுவுக்கு தமிழக அரசு பதில் மனு

மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Update: 2019-01-22 10:26 GMT
* காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

* இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

* அப்போது தமிழக அரசு சார்பில், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதேபோல், மத்திய அரசும் அவகாசம் கோரியது.

* இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

* இதற்கிடையே, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மத்திய அரசு முன்பு கூறியதற்கு மாறாக தமிழக அரசின் கருத்தை கேட்காமலேயே அணையின் திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கர்நாடக அரசு அணை கட்டும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால்,  திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்