1008 அலகு குத்தி பறவைக்காவடி : பழனிக்கு காவடி எடுத்த முருக பக்தர்
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வேடசந்தூரை சேர்ந்த முருகபக்தர் செல்வகணேஷ் உடல் முழுக்க 1008 அலகு குத்தி பறவைக்காவடியாக வந்து நேர்ச்சை செலுத்தினார்.
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வேடசந்தூரை சேர்ந்த முருகபக்தர் செல்வகணேஷ் உடல் முழுக்க 1008 அலகு குத்தி பறவைக்காவடியாக வந்து நேர்ச்சை செலுத்தினார். இடும்பன் கோயிலில் இருந்து உடலில் குத்தி பறவைக்காவடியாக கிரிவீதி சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார். கிரிவீதியில் பறவைக்காவடியில் வந்த அவரிடம் முருக பக்தர்கள் ஏராளமானோர் பிரசாதம் பெற்று சென்றனர்.
தைப்பூச திருவிழா மருவூர் முருகனுக்கு பாலபிஷேகம் : 1,008 பால்குடம் 1,008 காவடி சுமந்து வந்த பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் மருவூர் ஆலயத்தில் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் இருந்து பக்தர்கள் நடைபாதையாக மயிலாட்டம், ஒயிலாட்டம், வேல் குத்தி தேர் இழுத்தும், ஆயிரத்தெட்டு பால்குடம் , ஆயிரத்தெட்டு காவடி சுமந்து வந்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி முருகனை வழிபட்டனர்.