பட்டாசு ஆலைகளை திறக்க கோரிக்கை : கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்

பட்டாசு தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் நிபந்தனைகள் விதித்ததை அடுத்து சிவகாசியில் செயல்பட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டது.

Update: 2019-01-19 06:53 GMT
பட்டாசு தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் நிபந்தனைகள் விதித்ததை அடுத்து சிவகாசியில் செயல்பட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்த 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அதேநேரம் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று சிவகாசியில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேலான பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆலைகளை திறக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்