ஒடிசா சம்பவம் : "சாதிக்கொடுமைகளை அகற்ற தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - சரத்குமார்
சாதிக் கொடுமைகளை அகற்ற மத்திய அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சாதிக் கொடுமைகளை அகற்ற மத்திய அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். ஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டத்தில் வசித்து வந்த சரோஜ் என்பவரின் தாய் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை17 வயதான மகன் சைக்கிளில் சுமந்து சென்றதாகவும், சாதியை காரணம் காட்டி மக்கள் யாரும் அவர்களுக்கு உதவாதது கண்டனத்திற்கு உரியது என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார். சாதியை காரணம் காட்டி நிகழும் கொடுஞ் செயல்கள், ஆணவ படுகொலைகளை தடுக்க மத்திய அரசு உடனே தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு, சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.