காணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
சென்னை மெரினா கடற்கரை பாதுகாப்பு தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனதாக குறிப்பிட்டார்.
கடற்கரைக்கு வரும் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் ஆகியவை எழுதப்பட்ட அடையாள சீட்டு அவர்களது கையில் கட்டப்படும்.
பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், 50 சிசிடிவி கேமராக்கள் , பறக்கும் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படும் என்றார்.
மாற்றுத் திறனாளிகள், முதியோர் கடற்கரை வரை செல்ல வாகன ஏற்பாடுகளும், பார்வை திறனற்றவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் இருக்கும் குற்றவாளிகளை கண்டறிவும், பழைய குற்றவாளிகளை அடையாள காணவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆங்காங்கே பொருத்தியுள்ள எல்.இ.டி. டிவியில் காணாமல் போனவர்கள் பற்றி அறிவிப்பு உள்ளிட்ட தகவல் மற்றும் எச்சரிக்கைகள் ஒளிப்பராகும் என்று இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.