அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு
அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டரை அட்மினாக கொண்டு 'வாட்ஸ் அப்' குழு ஆரம்பிக்குமாறு காவல் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவலர்களின் சிறந்த பணிகள் தொடர்பான படங்கள், வீடியோக்கள், செய்திகளை பதிவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழு ஆரம்பிக்கப்பட்ட தேதி, எத்தனை பேர் உறுப்பினர்களாக உள்ளனர், அட்மின் பெயர் உள்ளிட்ட விபரங்களை ஜனவரி 18ம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்துக்கு மெயிலில் அனுப்புமாறும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் 'டிக் டோக்' விவகாரத்தின்போது, பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.