கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை - பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க கலாச்சார நடனம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகையை கோத்தர் இன மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகையை கோத்தர் இன மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். தங்களது பாரம்பரிய உடையணிந்து குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு கோத்தர் இன மக்கள் வந்தனர் , அங்கு ஊர் பூசாரிகள் 4 பேர் தலைமையில் ஆதி கோவிலின் நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றி கம்ப்பட்டராயர் சாமியை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க கலாச்சார நடனமாடி கொண்டாடினர்.