ஆடல், பாடலுடன் களை கட்டிய பொங்கல் விழா

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்த ஒத்தக்குதிரையில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2019-01-12 12:21 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்த ஒத்தக்குதிரையில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த  மாணவர்கள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். மாரியம்மன் கோயிலிலிருந்து டிரம்ஸ் இசைத்தபடி மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகள் சாலையில் நடனம் ஆடியபடியே சென்றனர்.  அதனை தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரி சார்பிலும்  மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உரியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

அரசு ஆரம்ப பள்ளியில் பொங்கல் விழா :மாணவர்கள் பொங்கலிட்டு மகிழ்ச்சி


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் பொங்கல் விழாவை நடத்தி அசத்தியுள்ளனர். திர்ப்பதிசாரம் அரசு ஆரம்ப பள்ளியில் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த அரிசி மற்றும் கரும்பு, மஞ்சள் ஆகியவற்றுடன் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில், மாணவர்கள் பங்கேற்று, இனிப்புகளையும் பறிமாறிக் கொண்டனர்.

தனியார் பள்ளியில் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம் 



சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் பொங்கல் விழா வெகு உற்சாகமாக  கொண்டாடப்பட்டது .  மண்பானையில் பொங்கல் வைத்த மாணவிகள் பொங்கலோ பொங்கலோ  என்று கூறி,  கிராமிய ஆடல் பாடல்களுடன்  பொங்கலை  கொண்டாடி மகிழ்ந்தனர்.   இதனையடுத்து ஜல்லிக்கட்டு காளைகள் போல் வேடமணிந்தும், அதனை அடக்குவது போலவும் மாணவர்கள் அசத்தினர். 

கிராமிய பொழுது போக்கு அம்சங்களுடன் பொங்கல் விழா



சேலத்தில் கிராமிய பொழுது போக்கு அம்சங்களுடன் கல்லூரி மாணவிகள் பொங்கல் வைத்து உற்சாகமாக  கொண்டாடி மகிழ்ந்தனர். அம்மாப்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரி சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில் மாணவிகள் பொங்கல் வைத்து இயற்கையை வழிபட்டனர். இதனையடுத்து, பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினதூரி, மாட்டு வண்டி, பட்டம் விடுதல், போன்ற விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. 


Tags:    

மேலும் செய்திகள்