பொங்கல் பரிசு ரொக்கம் யாருக்குக் கிடைக்கும் ?

பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் அளிப்பதை முறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகளில் யாருக்கு ரொக்கம் கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-01-09 19:19 GMT
மத்திய அரசின்  உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் 76 லட்சத்து 99 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்குக் கிடைக்கும். 

மத்திய, மாநில அரசின் உதவியுடன் 35 கிலோ அரிசி உட்பட பொருட்களை முன்னுரிமை அடிப்படையில் வாங்கும் 18 லட்சத்து 64 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கும் கிடைக்க உள்ளது.

மாநில அரசின் நிதி உதவியுடன் மட்டும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கும் முன்னுரிமையற்ற 90 லட்சத்து 8 ஆயிரம் குடும்ப அட்டைகளும்   நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்  பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய்  ரொக்கம் பெற  தடை இல்லை என்று  தெரிய வந்துள்ளது.

மாநில அரசின் நிதி உதவியுடன் அரிசி தவிர்த்து சர்க்கரை போன்றவை  வாங்கும்  முன்னுரிமையற்ற 10 லட்சத்து ஆயிரம்  குடும்ப அட்டைகளுக்குக் கிடைக்காது.

எப்பொருளும் இல்லாத முன்னுரிமையற்ற 41 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கும்  ரொக்கம் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்