லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - போக்குவரத்து காவலர்களிடம் ரூ 40,000 சிக்கியது

சத்தியமங்கலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் திடீர் சோதனையில் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து ஆய்வாளர் பெற்ற பணம் கட்டுக்கட்டாக சிக்கியது

Update: 2019-01-09 05:09 GMT
சத்தியமங்கலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் திடீர் சோதனையில் வாகன ஓட்டிகளிடம் இருந்து போக்குவரத்து ஆய்வாளர் பெற்ற பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து காவல்துறையினர் விதியை மீறி செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராஜேஸ் தலைமையில் போலீசார், திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சத்தியமங்கலம் - பண்ணாரி சாலையில், போக்குவரத்து ஆய்வாளர் பதி தலைமையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் இருந்து, 40 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. அவர்களிடம் விசாரித்த‌தில், இந்த பணம், வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அப்போது, திடீரென போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி தப்பி ஓடி, தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான காவல் ஆய்வாளரை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்