அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : ஒரு மாத ஊதியம் கிடைக்கும் என அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, காலமுறை சம்பளம் பெறும் சி மற்றும் டி - பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்றம், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.