ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு புறக்கணித்து வருகிறது - மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு புறக்கணித்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-01-07 07:27 GMT
ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு புறக்கணித்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊரகப் பகுதி மக்கள் துயரத்தில் இருக்கும் போது, வேலை வாய்ப்பு சட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என தெரிவித்துள்ளார். அந்த திட்டத்திற்காக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்த நிதி தீர்ந்த நிலையில், மீண்டும் நிதி ஒதுக்கும் அறிகுறி இல்லை என குறிப்பிட்டுள்ள சிதம்பரம், நிதி இல்லாததால், பல பஞ்சாயத்துகளில் வேலை அளிக்கப்படுவதில்லை என கூறியுள்ளார். விவசாயிகளின் பசியை போக்கி வந்த ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம், பாஜக  ஆட்சியில் பொலிவிழந்து உள்ளதாகவும் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்