அரசு பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்பு துவங்க கோரி வழக்கு

8 வாரத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2019-01-05 16:16 GMT
அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை துவங்குவது தொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு அளித்த மனு மீது எட்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் துவங்குவது என்பது மாநில கல்விக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் கூறியது.
Tags:    

மேலும் செய்திகள்