கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சோலார் மின்வசதி - அமைச்சர் தங்கமணி
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு இல்லாதவர்களுக்கு, சோலார் மின் வசதி செய்து தர அரசு தயாராக இருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு இல்லாதவர்களுக்கு, சோலார் மின் வசதி செய்து தர அரசு தயாராக இருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, கூடலூர் , பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதுடன், சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் கோரினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, சோலார் மின் வசதி அமைத்து கொடுக்க அரசு தயாராக உள்ளதாகவும், ஆனால் மக்கள் ஒத்துழைக்க அளிக்க மறுப்பதாக கூறினார். துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.