நீலகிரி: புதிய தொழில் முதலீட்டாளர் மாநாடு துவக்கி வைப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில், புதிய தொழில் முதலீட்டாளர் மாநாட்டை, மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி இன்ன சென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர் திரு KR. அர்ஜூனன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில், புதிய தொழில் முதலீட்டாளர் மாநாட்டை, மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி இன்ன சென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர் திரு KR. அர்ஜூனன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாநாட்டில் பேசிய மாவட்ட ஆட்சி தலைவர் இன்ன சென்ட் திவ்யா, மாநாடு மூலம், 111 கோடியே 26 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறினார். இதை தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் 1008 பெண்களுக்கு 4 கோடியே 25 லட்ச ருபாய் மதிப்பிலான திருமாங்கல்யம் வழங்கப்பட்டது.