கேரள அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டிய பா.ஜ.கவினர்
கேரள அமைச்சர் சுனில் குமார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கருப்பு கொடி காட்டி சரண கோஷமிட்ட பாஜகவினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள அமைச்சர் சுனில் குமார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கருப்பு கொடி காட்டி சரண கோஷமிட்ட பாஜகவினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்திற்கு உட்பட்ட மாவேலிக்கரை பகுதியில் தேனீபூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாய துறை அமைச்சர் சுனில்குமார் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேச எழுந்த போது, சபரிமலை விவகாரம் தொடர்பாக பாஜகவினர் கருப்பு கொடி காட்டி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களை உடனடியாக போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.