புயல் பாதிப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி கும்பகோணம் மீன் சந்தை அருகே 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்காததையும், புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்க்காததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் திடீரென வலுக்கட்டாயமாக கைது செய்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது