திறந்தவெளி நூலகம் திறப்பு : இந்தியாவில் முதல்முறையாக திருச்சியில்
இந்தியாவிலேயே முதன்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நூலகத்தை, பசுமை தீர்ப்பாய தெண்மன்டல தலைவரான ஓய்வுபெற்ற நீதியரசர் ஜோதிமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரியம் முதன்மைச் செயலர் ஹர்மந்தர்சிங் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகங்களை படித்து மகிழ்ந்தனர்.