அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு
சென்னை அயனாவரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாட்சி விசாரணைக்காக வழக்கு ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.