11,12 வயது சிறுமிகள் கருவுற்ற விவகாரம் : அபராதம் வழங்கிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கருக்கலைப்பு செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு 2 லட்சம் ரூபாயும் கருக்கலைப்பு செய்ய இயலாத 12 வயது சிறுமிக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-19 05:08 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த 11 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்கிடுமாறு சிறுமியின் தாயார் கோரியதன் பேரில், நீதிமன்றம் அனுமதி அளித்த‌து. அதன்படி, சிறுமி கருக்கலைப்பு செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் எதிர்காலம் கருதி ஏதேனும் ஒரு தேசியமாக்கப்பட்ட வங்கியில் சிறுமியின் பெயரில் 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக செலுத்துமாறு தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கரு முதிர்ச்சி பெற்றதால் கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை செலுத்துமாறு  நீதிபதிகள் சுப்பையா, தாரணி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்