தூத்துக்குடியில் 1500 போலீசார் பாதுகாப்பு - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.

Update: 2018-12-17 07:34 GMT
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட சில கட்சியினர், ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பெண்கள் சிலர் ஒன்று திரண்டு ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்திற்கு இடையே, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு, சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது. 

ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார், முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கலவர தடுப்பு வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்