மதுபான ஆலையில் வருமான வரி சோதனை : 14 அதிகாரிகள் சோதனை- ஆவணங்கள் சிக்கின?

தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-08 01:44 GMT
தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் தனியாருக்கு சொந்தமான என்ரிகா எண்டர்பிரைசஸ் எனும் மதுபான ஆலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ராகுல் ரெட்டி என்று கூறப்படுகிறது. இங்கு சுமார் ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஆலையில் இருந்து மதுபானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, டாஸ்மாக் குடோன்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்நிலையில், ஆலைக்கு நேற்று மாலை  வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 14  பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்