மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி, சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே அதிமுக-வினர் வைத்திருந்த ஜெயலலிதாவின் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதே சமயம் அருகில் அமமுக-வினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படம் மாயமானது. இதை அறிந்த இருதரப்பினரும் அப்பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதிமுகவினர் மர்ம நபர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில்
ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.