மருத்துவமனையில் ஸ்கேன் வசதி - சுகாதாரதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராமேஸ்வரம் தாலுகா மருத்துவமனையில் ஸ்கேன் வசதி கோரிய வழக்கில் சுகாதாரதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

Update: 2018-12-05 21:34 GMT
ராமேஸ்வரம் தாலுகா மருத்துவமனையில் 24 மணி நேரமும் எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ்ரே வசதியை ஏற்படுத்த கோரிய வழக்கில் சுகாதாரதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த சகாயதெனீஸ் ரீகன் என்பவர், தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து தமிழக சுகாதாரதுறை செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்